100 சத ஓட்டுப்பதிவுக்கு விழிப்புணர்வு இயக்கம்



100 சத ஓட்டுப்பதிவுக்கு விழிப்புணர்வு இயக்கம்


ஈரோடு, :ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, மாநகராட்சி தலைமை அலுவலக வாயில் பகுதியில், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் முதல் கையெழுத்திட்டு இயக்கத்தை துவக்கி வைத்தார். துணை ஆணையர் தனலட்சுமி, செயற்பொறியாளர் விஜயகுமார் உட்பட மாநகராட்சி அதிகாரிகள், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கையெழுத்திட்டனர். மக்கள், இளைஞர்களும் ஆர்வத்துடன் கையெழுத்தை பதிவு செய்தும், செல்பி எடுத்தும் சென்றனர்.

Advertisement