பூலாம்வலசில் நடப்பாண்டு சேவல் சண்டைக்கு தடை
அரவக்குறிச்சி: உலகப் புகழ்பெற்ற, பூலாம்வலசு சேவல் சண்டைக்கு இந்-தாண்டு தடை விதித்து, காவல்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான, சேவல் சண்டை போட்டி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்-துள்ள பூலாம்வலசு கிராமத்தில், பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக, நீதிமன்ற தடையாணை காரணமாக சேவல் சண்டை நடைபெறாமல் உள்-ளது. இந்தாண்டு சேவல் சண்டை நடைபெறும் என, சமூக வலைத-ளங்களில் பதிவுகள் வெளியாகி வைரலானது. இந்நிலையில், அர-வக்குறிச்சி காவல்துறை சார்பில் சேவல் சண்டை நடத்த தடை செய்யப்பட்டுள்ளது, தடையை மீறி, சேவல் சண்டை நடத்-தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சமூக வலைத-ளங்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று, தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நட-வடிக்கை எடுக்கப்படும் என, அரவக்குறிச்சி காவல்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.