பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்கள் விற்பனை விறுவிறு
கிருஷ்ணராயபுரம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வாழைக்காய் கமிஷன் மண்டிகளில் வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பா-டிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கொம்பாடிப்பட்டி, மகி-ளிப்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, பொய்கைப் புத்துார் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்-றனர்.அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள், லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டியில் வைத்து விற்பனை செய்-யப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வாழைத்தார்கள் விற்-பனை சூடு பிடித்துள்ளது. இதில் பூவன் தார், 300 ரூபாய், கற்பூர-வள்ளி தார், 200 ரூபாய், ரஸ்தாளி, 350 ரூபாய்க்கு நேற்று விற்கப்-பட்டது. வாழைத்தார்களை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபா-ரிகள் வாங்கி சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement