மானாமதுரையில் கரும்பு ரூ.40க்கு விற்பனை

மானாமதுரை : மானாமதுரை, இளையான்குடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு விற்பனை நடைபெற்று வருகிறது.

ஜன.14ம் தேதி பொங்கல் பண்டிகை, 15ம் தேதி மாட்டுப் பொங்கல் நடைபெற உள்ள நிலையில் தற்போதிலிருந்தே கரும்பு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மானாமதுரை இளையான்குடி பகுதி கரும்பு வியாபாரிகள் மேலுார் மற்றும் சாலுார் பகுதிகளில் இருந்து கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்து இப்பகுதியில் விற்பனை செய்து வருகின்றனர்.

வியாபாரி ரத்தினக்குமார் கூறியதாவது:

இந்த வருடம் பொங்கலுக்காக கரும்பு கடந்த மாதம் முதலே அறுவடை செய்து விற்பனைக்காக தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது. 10 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ.300லிருந்து ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.

Advertisement