சுத்துக்குழி கிராமத்தில் வேளாண் பயிற்சி முகாம்

புவனகிரி : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் மாணவர்கள் புவனகிரி அடுத்த சுத்துக்குழியில விவசாயிகளுடன் நேரடி பயிற்சி முகாமில் ஈடுபட்டனர்.

புவனகிரி சுத்துக்குழியில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி கவுன்சிலர் காளிமுத்து பாரதிதாசன் தலைமை தாங்கினார். மாணவி கனிமொழி வரவேற்றார். உழவர் மன்ற தலைவர் அமிர்தகணேசன் முன்னிலை வகித்தார். நெறியாளர் பேராசிரியர் பாலமுருகன் வழிகாட்டுதல் ேபரில் கிராமத்தில் தங்கி விவசாயிகளுடன் நேரடி பயிற்சி பெறும் மாணவிகள், திட்ட முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, இயற்கை முறை விவசாயம் குறித்தும், பல்வேறு கரைசல்கள் குறித்தும், பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் மாணவியர் ஜைரன்காமினி, கமலவர்ஷினி, கனிஷ்கா, கனிதா பங்கேற்றனர்.

Advertisement