திருவாசகம் முற்றோதல்

கம்பம் : கம்பராயப் பெருமாள் கோயிலில் மார்கழி மாத உற்ஸவ விழா நடைபெற்று வருகிறது. திருவாசகம் அருளிய மாணிக்கவாசகருக்கு உற்ஸவ விழாவும் நடைபெறுகிறது.

விழாவின் நேற்று முன்தினம் சஷ்டி மண்டபத்தில் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. கம்பம் சைவ சித்தாந்த பயிற்சி மாணவர்கள், பன்னிரு திருமுறை பயிலும் அடியார்கள் மற்றும் திரளான சிவனடியார்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை சைவ சித்தாந்தம் பயிற்சி மைய அமைப்பாளர் பேராசிரியர் ராமநாதன், பரசுராமன், சுரேஷ் பாபு, சிவமடம் ராமகிருஷ்ணன், சுகுமாறன் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement