அரசு பள்ளியில் பொங்கல் விழா 

புதுச்சேரி : தட்டாஞ்சாவடி சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளியின் சமுதாய நலப்பணி திட்டம் சார்பில் பொங்கல் விழா நடந்தது.

பழனி தலைமை தாங்கினார். ஆசிரியர் அறிவழகன் வரவேற்றார். தமிழாசிரியர் பாலபாரதி நோக்கவுரை ஆற்றினார்.

சமுதாய நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் வாழ்த்தி பேசினார்.

மாணவர்கள் புது பானையில் பொங்கல் வைத்து, சூரிய பகவானை வழிபட்டனர்.

விழாவையொட்டி, மாணவர்களிடையே கோலம், நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முனுசாமி, நாகராஜ், கவுரி, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை சி.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் முருகன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

கணித ஆசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Advertisement