விழிப்புணர்வு கருத்தரங்கம்
போடி : போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு கருத்தரங்கம் தலைமையாசிரியர் மரிய சிங்கம் தலைமையில் நடந்தது. போகி கொண்டாட்டத்தின் போது வீடுகளில் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், டயர், டியூப், பழைய துணிகள் பொது இடங்களில் எரிப்பதால் வெளியேறும் நச்சுப் புகையால் மாசு ஏற்படுகிறது. சுற்றுச் சூழல் பாதிப்பால் மக்கள், விலங்குகள், நிலங்கள் பாதிப்பு அடைகின்றன.
தேவையற்ற கழிவு பொருட்களை எரிப்பதற்கு பதிலாக மறுசுழற்சிக்கு அனுப்பி பாதுகாக்க வேண்டும் என மாணவர்களுக்கு ஆசிரியைகள் சந்திரகலா, பத்மாவதி, ஈஸ்வரி ஆகியோர் விளக்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement