காதலி விபரீதம்: காதலன் கைது

பள்ளிப்பாளையம்: ஈரோடு அடுத்த பெருந்துறையை சேர்ந்தவர் ஹரீஷ், 19; இவர் கல்லுாரியில், இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

திருப்பூரை சேர்ந்த, 19 வயது பெண்ணை, கடந்த, 3 ஆண்டாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம், இருவரது வீட்-டிற்கும் தெரிந்துவிட்டது. இதனால் திருமணம் செய்துகொள்ளு-மாறு அந்த பெண் கேட்டுள்ளார். ஆனால், ஹரீஷ் மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த பெண், பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை பகுதியில் உள்ள பாட்டி வீட்டில், கடந்த, 25ல் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெண்ணின் தந்தை, பள்ளிப்பாளையம் போலீசில் அளித்த புகார்-படி, 15 நாட்களுக்கு பின், நேற்று இரவு ஹரீஷை கைது செய்-தனர்.

Advertisement