சிருங்கேரியில் 50,000 பக்தர்கள் பாராயணம்

சிருங்கேரி: சிருங்கேரி பீடாதிபதியின் ஸ்வர்ண பாரதீ மஹோத்சவத்தை முன்னிட்டு, 50,000 பக்தர்கள் இணைந்து, ஸ்தோத்திர பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரியில் அமைந்துள்ள சாரதா பீடத்தின் மடாதிபதி ஜகத்குரு சங்கராசாரியா ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா சுவாமிகள், சன்னியாசம் ஏற்று, 50வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. ஸ்வர்ண பாரதி மஹோத்சவம் என்ற பெயரில் ஓராண்டுக்கு சிருங்கேரியிலும், நாடு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, ஆதி சங்கரர் அருளிய மூன்று உன்னத ஸ்தோத்திரங்களை ஓதும், ஸ்தோத்திர திரிவேணி சமர்ப்பண நிகழ்ச்சிக்கு, சிருங்கேரி மடத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், 50,000 பக்தர்கள் பங்கேற்று, மூன்று உன்னத ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தனர்.

Advertisement