ஆலோசனை கூட்டம்

திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த தொ.செங்கமேடு கிராமத்தில் எஸ்.என்.ஜெ., அம்பிகா சர்க்கரை ஆலை சார்பில், கரும்பு நடவு செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, கரும்பு மேலாளர் குமணன் தலைமை தாங்கினார். கரும்பு கோட்ட அலுவலர், கரும்பு ஆய்வாளர்கள், முன்னோடி விவசாயிகள், கரும்பு விவசாயிகள், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், எஸ்.என்.ஜெ., சர்க்கரை ஆலை அறிவித்த கரும்பு நடவு மானியம் வழங்குவது. 2024 - -25ம் ஆண்டு கரும்பு அரவைக்கான ஊக்கத்தொகை மானியங்கள் வழங்குவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

கரும்பு நடவுக்கு புதிய தொழிற்நுட்பங்களை கையாளுவது, விதை நேர்த்தி, பூச்சி நோய் கட்டுப்பாடு பயிற்சி மற்றும் இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை செய்வதன் மூலம் வெட்டுக்கூலியை குறைப்பது குறித்து ஆலை அலுவலர்கள், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

Advertisement