பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் ஊக்கத் தொகை

மதுரை : மேலுார் அருகே கோட்டநத்தம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க மகாசபை கூட்டம் நடந்தது.

641 பால் உற்பத்தியாளர்களுக்கு 6 மாதங்களுக்குரிய ஊக்கத் தொகை ரூ.9.73 லட்சம், அதிக பால் வழங்கிய முதல் 3 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மதுரை துணைப் பதிவாளர் (பால்வளம்) செல்வம், பொது மேலாளர் சிவகாமி, துணைப் பொது மேலாளர் பாசு, உதவி பொது மேலாளர் (பால் உற்பத்தி) கார்த்திகேயன், கூட்டுறவு சார்பதிவாளர் மனோகர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சார்பதிவாளர் ராமச்சந்திரன், மேலுார் பால் சேகரிப்பு குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement