கணவருடன் பிரச்னை: இளம்பெண் தற்கொலை

புவனகிரி : புவனகிரி அருகே கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

புவனகிரி அடுத்த பூதவராயன்பேட்டையை சேர்ந்தவர் முருகேசன் மகன் சிவசங்கரன். இவரது மனைவி ஷகிலா, 28; திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

இந்நிலையில், சிவசங்கரன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு பிரச்னை செய்து வந்துள்ளார்.

கடந்த 6ம் தேதி மீண்டும் கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட் டுள்ளது. இதனால் மனமுடைந்த ஷகிலா, பூச்சி மருந்தை குடித்து மயங்கினார்.

அருகில் இருந்தவர்கள் மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார்.

இது குறித்து ஷகிலா தயார் செந்தமிழ்ச்செல்வி புகாரின் பேரில் புவனகிரி போலீசார் சந்தேக மரண பிரிவில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். ஷகிலாவிற்கு திருமணமாகி இரண்டரை ஆண்டு களே ஆவதால், வரதட்சணை கொடுமையாக இருக்குமோ என, சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மிராணி விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement