வேளாண் அதிகாரிகள் ஆய்வு
சிறுபாக்கம் : சிறுபாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர்.
மங்களூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த மாதம் பெய்த புயல் மற்றும் கனமழையால் சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால், அப்பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் வழங்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, சென்னை, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் நாகராஜன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர்.
சிறுபாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் சாகுபடி செய்த பயிர்களின் பரப்பு, செலவினம், பாதிப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, கடலூர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அருண், மங்களூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் அருள்தாசன உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement