மீட்கப்பட்ட கோயில் நிலங்களை பாதுகாக்க வேலிகள்

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலங்களை பாதுகாக்க வேலிகள் அமைக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஒவ்வோரு கோயில்களுக்கும் சொந்தமான பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

ஆனால், கோயில் நிர்வாகத்தினர் தங்களுக்கு சொந்தமான நிலங்களை அடிக்கடி ஆய்வு செய்து காப்பாற்றாததால் அரசியல் பின்புலம் கொண்டோர் குறைந்த தொகைக்கு குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். நீண்ட காலம் பயன்படுத்துவதால் அதனை அவர்கள் ஆக்கிரமிப்பு செய்து விடுகின்றனர்.

கடந்த சில மாதங்களாக ஆக்கிரமிப்பு நிலங்களை கண்டறிந்து அதனை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி உட்பட பல்வேறு கோயில்களின் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்படும் நிலங்களை பாதுகாக்க, மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க வேலிகள் அமைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement