விருத்தாசலத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
விருத்தாசலம்,: விருத்தாசலம் நகராட்சி 16வது வார்டில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தி.மு.க., நகர செயலர் தண்டபாணி தலைமை தாங்கினார். 16வது வார்டு கவுன்சிலர் தீபா மாரிமுத்து முன்னிலை வகித்தார்.
நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் கலந்து கொண்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கினார்.
இதில், வட்ட செயலர் துரை கோவிந்தசாமி, வட்ட பிரதிநிதிகள் ராமமூர்த்தி, பாலு, ராஜேஷ், நாராயணன், செந்தில், சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement