கழிப்பறை கழுவிய மாணவியர் தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்'
பாலக்கோடு : தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், கெண்டேனஹள்ளி பஞ்., பெருங்காடு மலை கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 150 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் கலைவாணி உட்பட ஐந்து ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
ஐந்தாம் வகுப்பு மாணவியர் மூன்று பேரை, தினமும் பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ய, ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, பெற்றோரிடம் மாணவியர் தெரிவித்தனர். அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
தொடர்ந்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தென்றல் உள்ளிட்ட அதிகாரிகள் மாணவியரிடம் விசாரித்தனர். குற்றச்சாட்டு உறுதியானதால், தொடக்கல்வி இயக்குனர் நரேஷ் பரிந்துரைப்படி, தலைமை ஆசிரியை கலைவாணி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement