கண்ணை மறைத்த 'ஏர்-பேக்' கார் கவிழ்ந்தும் 4 பேர் தப்பினர்
வாழப்பாடி : சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்தவர் விஷ்ணு, 30; சென்னை வழக்கறிஞர். பொங்கல் பண்டிகையை கொண்டாட, சேலம் மாவட்டம், பூலாம்பட்டியில் உள்ள மாமியார் வீட்டுக்கு, 'எக்கோ ஸ்போர்ட்' காரில், மனைவி, மாமியார், 2 வயது குழந்தையுடன் நேற்று ஊருக்கு வந்தார்.
வாழப்பாடியில், சேலம் - சென்னை பைபாஸ் சாலையில், அதிகாலை, 5:00 மணிக்கு வந்தபோது, மீடியன் பகுதியில் எச்சரிக்கை பலகை இருந்த, 'ட்ரம்' மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது.
இதனால், காரின் ஏர்பேக் திறந்து கொண்டதால், அவரது முகத்தை மறைத்தது. சாலை தெரியாததால், கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தாறுமாறாக ஓடிய கார் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. விபத்தில் சிக்கிய விஷ்ணு குடும்பத்தினரை, அப்பகுதி மக்கள் மீட்டனர். அதிர்ஷ்டவசமாக குழந்தை உட்பட நான்கு பேரும் லேசான காயத்துடன் தப்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement