மாநகராட்சி கெடுபிடி வரி வசூல் வியாபாரிகள், பொதுமக்கள் கவலை

கடலுார் : கடலுார் மாநகராட்சியில் பொங்கல் பண்டிகை நேரத்தில் வரிவசூலில் கெடுபிடி காட்டுவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

கடலுார் மாநகராட்சியில் கடைகள், வீடுகள், குடிநீர் வரி பாக்கி ஏராளமாக உள்ளன. இந்நிலையில் அண்மையில் வீசிய பெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்ததில் தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளநீர் கலக்கும் வங்கக்கடல் பகுதியில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக கடலுார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டன. மாநகராட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு அளிக்கப்பட்டது. வெள்ளநீர் வடிந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மாநகராட்சி வரி பாக்கிகளை முடுக்கி விட்டுள்ளது. வரிபாக்கி வைத்துள்ளவர்களை மாநகராட்சி ஊழியர்கள் கெடுபுடி வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர். பாக்கி வைத்துள்ள கடைகளை 'சீல்' வைப்பதாக மிரட்டி வருகின்றனர். வெள்ள பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், பொங்கல் பண்டிகை நெருங்கும் இந்த நேரத்தில் வரிபாக்கிக்காக கெடுபிடி வசூல் செய்வதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement