சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
சிவகங்கை : சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி அறிவொளி துவக்கி வைத்தார்.
மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா, ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செந்தில்முரளி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி சுப்பையா, சார்பு நீதிபதி பாண்டி, வழக்கறிஞர் சங்க தலைவர் ஜானகிராமன், வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
* காரைக்குடி நேஷனல் சேப்டி கல்லூரி சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தொடங்கி வைத்தார். தாளாளர் சையது, இயக்குனர் மனோகர், எஸ். ஐ.,க்கள் ராஜவேல், மாடசாமி, மாணவர்கள் கலந்து கொண்டனர்.