பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
மானாமதுரை : மானாமதுரை அருகேயுள்ள புலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரெங்கன் கூறியதாவது:
புலிக்குளம் கிராம பகுதியில் 100 ஏக்கருக்கும் மேல் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. போதிய தண்ணீர் வசதி இல்லாமல் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயிர்களை காப்பாற்றி வரும் நிலையில் காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி விடுவதால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
ஒரு ஏக்கருக்கு இதுவரை ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். ஆனால் ஒரு சில நாட்களிலேயே அனைத்தையும் காட்டுப்பன்றிகள் அழித்து விடுகின்றன. மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே விவசாயத்தை கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement