பயிற்சி முகாம் 

சிவகங்கை : கொல்லங்குடியில் பாரத சாரண, சாரணிய சங்க பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.

முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் மாரிமுத்து, விஜய சரவண குமார், ஜோதிலட்சுமி, நல்லாசிரியர் கண்ணப்பன், பகீரத நாச்சியப்பன், சாரண இயக்க கமிஷனர் மகாலட்சுமி பங்கேற்றனர். அழகாபுரி போதி சர்வதேச பள்ளி தாளாளர் மணிஸ் சத்யநாதன், காளிராஜா, சரவணன், முத்துச்சாமி, ரவிச்சந்திரன் பேசினர்.

தலைமை பயிற்றுநர்கள் ராஜகோபால், கிருஷ்ணன், வன்னிசெல்வம் பயிற்சி அளித்தனர். மாவட்ட செயலாளர் முத்துக்குமரன், தலைவர் புவனேஸ்வரன் பங்கேற்றனர்.

Advertisement