எக்விடாஸ் குருகுல் பள்ளி 10ம் ஆண்டு விழா

கடலுார் : கடலுார், தேவனாம்பட்டிணம் எக்விடாஸ் குருகுல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ம் ஆண்டு விழா நடந்தது.

பள்ளித் தாளாளர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். முதல்வர் சசிகலா முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினரான கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.

அப்போது, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவரகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.

விழாவில், டாக்டர் வைத்தீஸ்வரன், கவுன்சிலர் கிரேஸி லிவிங்ஸ்டன், வணிகர் சங்க சரவணன், பெற்றோர், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Advertisement