பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா
திருப்புத்துார் : திருமயம் மவுண்ட் சீயோன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.கல்விக்குழும தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் தலைமையேற்றார். இயக்குனர் ஜெய்சன் கே. ஜெயபரதன், முதல்வர் ப.பாலமுருகன் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியை அம்மு நன்றி கூறினார்.
கீழச்சிவலபட்டி ஆர்.எம்.எம்.மெட்ரிக் பள்ளியில் தாளாளர் பழனியப்பன் தலைமை வகித்தார் செயலர் குணாளன் முன்னிலை வகித்தார்.
நேமம் நகரக் கோயில் அறங்காவலர் சோலையப்பன், திருமயம் திருச்சபை போதகர் சைமன், புகைப்படவியலாளர் பீர்முகமது பங்கேற்றனர்.பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பொங்கல் வைத்தனர்.
*திருப்புவனம் வேலம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பெற்றோர், மாணவர்கள் இணைந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். பொங்கல்விழா குறித்து முதல்வர் ஜாஸ்மின் சாந்தி விளக்கம் அளித்தார். கோலப்போட்டி,கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
*நாட்டரசன்கோட்டை கே.எம்.எஸ்.சி.,பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. தலைமையாசிரியர் பொறுப்பு ஆரோக்கிய ஸ்டெல்லா தலைமை வகித்தார். முன்னாள் தலைமையாசிரியை மகாலெட்சுமி, நல்லாசிரியர் கண்ணப்பன், கவுன்சிலர் சத்யா மோகன்ராஜ் கலந்து கொண்டனர். மாணவர்கள் ஆசிரியர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
* இடையமேலுார் விக்னேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் தாளாளர் ஜெயதாஸ் தலைமையில் நடந்தது.முதல்வர் ஜான்சி வரவேற்றார்.மாணவர்களின் கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம், பெற்றோர்களுக்கு கோலப்போட்டி நடந்தது. ஆசிரியை லெட்சுமி பரிசு வழங்கினார்.