மணல் கடத்தல் வேன் பறிமுதல்
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மணல் மூட்டைகளை கடத்தி வந்த வேனை போலீ சார் பறிமுதல் செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றபோது, எருமனுார் மணிமுக்தாறு மேம்பாலம் அருகே நின்றிருந்த டாடா ஏஸ் வேனை சோதனை செய்தனர். அப்போது, 16 சாக்கு மூட்டைகளில் ஆற்று மணலை கடத்தி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, வேன் டிரைவர் ராசாபாளையம் பரமசிவம் மகன் வீரமணிகண்டன், 32, என்பவரை கைது செய்தனர். மேலும், வேனை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார், பெலாந்துறை அணைக்கட்டு பகுதியில் பைக்கில் மணல் மூட்டைகள் கடத்திச் சென்ற வெங்கடேசன், 45, என்பவரை மடக்கிப் பிடித்து, மணல் மூட்டைகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.