22 பேருக்கு அயோத்திஸ்ரீ விருது

தேவகோட்டை : ஜமீன்தார் சுவாமி குருபூஜை விழா துலாவூர் ஆதினம் நிரம்பழகியஞானப்பிரகாச தேசிகர் தலைமையில் நடைபெற்றது.

கா.செ. மடம் அதிபர் நர்மதா ராமசாமி சுவாமி, ஜமீன்தார் சோமநாராயணன் முன்னிலை வகித்தனர். தேவார ஓதுவார்கள் நல்லூர் கந்தசாமி, தென்காசி பிள்ளைமுத்து, திருப்பாதிரிப்புலியூர் சுப்பிரமணியன் மூவருக்கும் திருமுறைகிழவர் விருது, பொற்கிழி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு வலையபட்டி பச்சை காவடி தலைமையில் ராமேஸ்வரத்தில்இருந்து காசி வழியாக அயோத்திக்கு பாதயாத்திரையாக சென்று திரும்பிய 22 பேருக்கு 'அயோத்திஸ்ரீ ' பட்டம் மற்றும் பாராட்டு சான்றிதழை ஜமீன்தார் சோமநாராயணன், விருந்தினர்கள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் எழுத்தாளர் இலக்கியமேகம் சீனிவாசன் உள்ளிட்ட பலர் பேசினர்.

Advertisement