சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு

திருப்புத்துார் : காரைக்குடியில் ஜன.19ல் 25 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கிடையேயான 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி ஆண்டு தோறும் நடைபெறுகிறது.

அப்போட்டியில் பங்கேற்க சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு காரைக்குடியில் ஜன.19ல் நடைபெற உள்ளது. அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி வலைப்பயிற்சி மைதானத்தில் காலை 9:00 மணிக்கு தேர்வு துவங்குகிறது.

பங்கேற்க விரும்பும் வீரர்களின் பிறந்த நாள் 1.-9.-1999 அன்றோ அதற்குப் பின்னரோ இருத்தல் வேண்டும். வெள்ளைச் சீருடை அணிந்து வரவேண்டும், கிரிக்கெட் உபகரணங்கள் தாங்களே கொண்டு வரவேண்டும்.ஆதார் நகல் கொண்டு வரவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு செயற்குழு உறுப்பினர் வரதராஜன் அலைபேசி எண்: 70103 2 5125ல் தொடர்பு கொள்ளவும்.

Advertisement