பள்ளி,கல்லுாரிகளில் பொங்கல் விழா
கூடலுார : கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில் பொங்கல் விழா இணைச் செயலர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி முன்னிலையில் நடந்தது. முதல்வர் ரேணுகா வரவேற்றார். பொங்கல் வைக்கப்பட்டு, பாரம்பரிய முறைப்படி வழிபாடு நடத்தி பொங்கல் வழங்கப்பட்டது. மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தன.
- கூடலூர் மழலையர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நிர்வாக குழு உறுப்பினர் நடராஜன் தலைமையில் நடந்தது.
முதல்வர் சகிலா முன்னிலை வகித்தார். பொங்கல் வைக்கப்பட்டது. பாரம்பரிய விளையாட்டான உறியடித்தல், நாட்டுப்புறப் பாடல்கள், விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கம்பம்: காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொங்கல் வைத்து டாக்டர்கள், நர்சுகளும் குலவையிட்டு கொண்டாடினார்கள். மருத்துவ அலுவலர்கள் ரமேஷ், முருகானந்தம், சித்தா டாக்டர் சிராசுதீன், மருந்தாளுனர் பசும்பொன், நர்சுகள் பங்கேற்றனர். ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
தேனி: நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் பொங்கல் விழா நடந்தது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் ஒருங்கிணைத்தார்.