பெண்ணிடம் ரூ.10 லட்சம் வரதட்சணை: 4 பேர் மீது வழக்கு
பெரியகுளம் : மகனுடன் வாழ ரூ.10 லட்சம் வரதட்சணை கொடுக்க வேண்டும் என கேட்ட மாமனார், கணவர் உட்பட 4 பேர் மீது பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் செங்கொடி கோகிலா 31. இவருக்கும் கம்பம் காந்தி சிலை பகுதியைச் சேர்ந்த பிரசாத் 38. க்கும் 2019ல் திருமணம் நடந்தது.
அப்போது 25 பவுன் நகைகள் மற்றும் சீர் வரிசை கொடுக்கப்பட்டது. 2 ஆண்டுகளில் குழந்தை இல்லை என பிரசாத், இவரது தந்தை மணிமந்திரி 64. உறவினர்கள் ரத்தினமாலா 56. நிவேதா 35. ஆகியோர் செங்கொடி கோகிலாவை வீட்டை விட்டு வெளியேற்றினர்.
செங்கொடி கோகிலா தேனி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். போலீசார் பிரசாத் உட்பட நான்கு பேர் மீதும் 2022 மார்ச் 3ல் வழக்கு பதிவு செய்தனர். பின் ஊர் முக்கியஸ்தர்கள் சமரசமாக பேசி வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
இதனை தொடர்ந்து செங்கொடி கோகிலாவை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு, பிரசாத்தை வெளிநாட்டிற்கு வேலைக்கு வெளிநாட்டிற்கு அனுப்பினர். இது குறித்து கேட்டதற்கு' உனது பெற்றோரிடம் ரூ.10 லட்சம்
வாங்கி வந்தால் மட்டுமே பிரசாத்துடன் வாழ விடுவோம்', என தெரிவித்தனர்.
தன்னை ஏமாற்றி திருமணம் செய்து, வரதட்சணையாக ரூ.10 லட்சம் கேட்பதாக செங்கொடி கோகிலா புகாரில், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் பிரசாத் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.-