'குழந்தைகளிடம் அன்பு செலுத்துங்கள்'
மேட்டுப்பாளையம்,; சிறுமுகையில், அம்பாள் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் 16ம் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். செயலர் கீதா முன்னிலை வகித்தார். தமிழக காவல்துறையின் முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு, இந்திய விமானப்படையின் 'ஸ்குவாட்ரான்' பிரிவு தலைவர் சையத் சல்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில், முன்னாள் டி.ஜி.பி., டிசைலேந்திரபாபு பேசுகையில், ''பெற்றோர் குழந்தைகளை மதிக்க வேண்டும், பாராட்டி அவர்களது செயல்களை ஊக்குவிக்க வேண்டும். நம் கஷ்டத்தை சொல்ல வேண்டும். பெற்றோர் ஒழுங்காக இருந்தால் தான், குழந்தைகள் பெற்றோர்களை மதிப்பார்கள். ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆக வேண்டும் என்றால் தினமும் செய்தித்தாள் படிக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளிடம் நிபந்தனை இன்றி அன்பு செலுத்த வேண்டும்,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement