இளைஞர் தின விழா

சேத்துார் : தேவதானத்தில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது.

தேவதானம் மண்டல பொறுப்பாளர் மலைக்கனி தலைமை வகித்தார். ஒன்றிய சேவா பிரமுக் பாண்டியன் முன்னிலை வகித்தார். மதுரை கோட்ட பொறுப்பாளர் முரளி, செய்தி தொடர்பாளர் முருகன் துவக்கி வைத்தனர்.

ஒன்றிய தலைவர் ஞான சாஸ்தா விவேகானந்தரின் வாழ்க்கை, இளைஞர்களுக்கு காட்டிய வழிகாட்டுதல்கள், தேசபக்தி, இளைஞர் சக்தி குறித்து அவரது விசாலமான பார்வை பற்றி பேசினார். மாவட்ட பொறுப்பாளர் ஞான குருசாமி நன்றி கூறினார்.

Advertisement