வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு, பூ வழங்கல்

புதுச்சேரி : ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் இனிப்பு, பூக்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயம் உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தாலும், பெங்கல் பண்டிகை வரை கெடுபிடி இருக்காது என போலீசார் தெரிவித்து விட்டனர். ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி, நேற்று மாலை மரப்பாலம் சந்திப்பில் கிழக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு, பூக்கள் வழங்கிய பாராட்டினர். ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு, ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வாகனத்தில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement