தாண்டிக்குடியில் குவிக்கப்படும் மரங்களால் விபத்து
தாண்டிக்குடி: தாண்டிக்குடி வத்தலக்குண்டு ரோட்டில் வெட்டி குவிக்கப்படும் மரங்களால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
விவசாய தோட்டங்களில் வனத்துறை அனுமதியுடன் மரங்கள் வெட்டப்படுகின்றன. இவை மலைத்தள பாதுகாப்பு விதிகளின்படி அகற்றப்படாமல் குறைந்த அளவு மரங்களுக்கு அனுமதி பெற்று கூடுதல் மரங்கள் வெட்டப்படும் நிகழ்வுகள் அதிகரிக்கின்றன. அனுமதி பெற்ற விவசாயத் தோட்டங்களிலிருந்து லாரிகள் மூலம் மரங்கள் தரைக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்ல வனத்துறை அனுமதி சீட்டு வழங்குகிறது.
இருந்த போதும் விதி முறைகளை வியாபாரிகள் கடைபிடிக்காது போக்குவரத்துள்ள மெயின் ரோட்டோரங்களில் மரங்களை குவிக்கும் செயல்களை வாடிக்கையாக கொண்டனர். இதை கண்காணிக்க வேண்டிய நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை அதிகாரிகள கண்டு கொள்வதில்லை. மரங்கள் லாரிகளில் குறிப்பிட்ட இடத்தில் ஏற்றி செல்வதை வனத்துறையினரும் கண்டுகொள்வதில்லை.
மெயின் ரோட்டில் மரங்கள் குவிக்கப்பட்டு அவை போக்குவரத்திற்கு இடையூறாக மங்களம்கொம்பு, கானல்காடு, தடியன்குடிசை இடையே பரவலாக உள்ளது.