மலரஞ்சலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட சிவாஜி தலைமை மன்றத்தின் சார்பில் திருப்பூர் குமரன்,முன்னாள் பிரதமர் லால்பகதுார் சாஸ்திரி ஆகியோரின் நினைவு தினம், விவேகானந்தரின் பிறந்ததினம் அனுசரிக்கப்பட்டது.


திண்டுக்கல் தெற்கு ரத வீதியில் நடந்த நிகழ்விற்கு மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். செயலர் தண்டபாணி முன்னிலை வகித்தார். துணைதலைவர் மாரியப்பன் வரவேற்றார். ஆலோசகர்கள் டால்டன், சஞ்சய்குமார் மலர்துாவி மரியாதை செலுத்தினர். தங்கராஜ் நன்றி கூறினார். பொருளாளர் வெங்கிடு மற்றும் வேல்ராஜ் ஏற்பாடு செய்தனர்.

Advertisement