ஸ்ரீமந் நடன நாயகி சுவாமி ஜெயந்தி விழா

மதுரை : மதுரையில் ஸ்ரீமந் நடன நாயகி சுவாமி 182ம் ஆண்டு ஜெயந்தி இசை, இலக்கிய நிறைவு விழா நடந்தது.

ஜன.6 ல் துவங்கிய விழாவில் பல்வேறு இசை, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று நடன நாயகி மந்திர் தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு போதை மருந்து கட்டுப்பாடு ஆணைய இயக்குனர் ஸ்ரீதர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பத்திரிகையாளர் சாமி, ஓய்வு பெற்ற நுாலகர் சேதுராமன் ஆகியோருக்கு நாயகியார் சாகித்திய விருதை, நிர்வாக குழு உறுப்பினர்கள் தாமோதரன், பிரகாஷ்குமார் வழங்கினர். சவுராஷ்டிரா கிளாசிக்கல் போரம் பிரேம்குமார், சவுபாக்கியா ஜூவல்லர்ஸ் சபரிபாபு பாராட்டு பெற்றனர்.

மந்திர் செயலாளர் கீதாபாரதி, இணைச்செயலாளர் ராமசுப்பிரமணியன், கவுரவ ஆலோசகர் பரசுராம், துணைத் தலைவர் ஞான பிரபாகரன், நிர்வாகக் குழு உறுப்பினர் குப்புசாமி, என்.எம்.ஆர்., சுப்புராமன் மகளிர் கல்லுாரி தலைவர் ஜவஹர் பாபு பங்கேற்றனர்.

Advertisement