ராதா மாதவ திருக்கல்யாண மகோற்சவம் நிறைவு விழா

புதுச்சேரி : புதுச்சேரியில் ராதா மாதவ திருக்கல்யாண மகோற்சவ நிறைவு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி, சித்தன்குடி, ஜெயராம் கல்யாண மண்டபத்தில், வேதபாரதி சார்பில் ராதா மாதவ திருக்கல்யாண மகோற்வசம் நேற்று முன்தினம் துவங்கியது. அன்று காலை விக்னேஸ்வர பூஜை, வேத பாராயணம், நாம சங்கீர்த்தனம் மற்றும் மாலையில் விஷ்ணு சகஸ்ரநாமம், மகா மந்தர அகண்ட பாராயணம் நடந்தது. இரவில் அஷ்டபதி, தரங்கம், பஞ்சபதி, கணேசாதி தியானம், பூஜை, திவ்ய நாமம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று காலையில், மார்கழி மாத பஜனை, உஞ்சவ்ருத்தி, திவ்ய நாமம், அஷ்டபதி, ராதா மாதா திருக்கல்யாணம், ஆஞ்சநேயர் உற்சவம், மங்கள ஆரத்தி நடந்தது. விழாவில் கடையநல்லுார் ராஜகோபால்தாஸ் பாகவதர் மற்றும் அவரது குழுவினர் பங்கேற்றனர்.

Advertisement