நடராஜர்,சிவகாமசுந்தரிக்கு மீனவர் சமூகத்தினர் பட்டு சாத்தும் நிகழ்ச்சி
சிதம்பரம்: சிதம்பரம் ஆருத்ரா தரிசன திருவிழாவில், நடராஜருக்கும் சிவகாமசுந்தரிக்கும் பருவத ராஜகுல சிவன்படவர், மீனவர் சமுதாய மக்கள் சார்பில் பட்டு சாத்தல் நிகழ்ச்சி நடந்தது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா திருவிழாவையொட்டி, நேற்று தேரோட்டத்தில் நடராஜருக்கும் சிவகாமசுந்தரிக்கும் பருவத ராஜகுல சிவன்படவர் மீனவ சமுதாய மக்கள் சார்பில் சீர்வரிசை பட்டு சாத்தி சிறப்பிக்கும் விழா நடந்தது.
நிகழ்ச்சியில் சிதம்பரம் மூர்த்தி கபே உரிமையாளர், பருவத ராஜகுல சமுதாய மக்கள் நிர்வாகி, மோகன் தலைமையில் நடந்தது.
வடக்கு மெயின் ரோட் டில் உள்ள செல்வ விநாய கர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று கஞ்சி தொட்டி முனையில், தேரில் எழுந்தருளியுள்ள நடராஜருக்கும் சிவகாமசுந்தரிக்கும் பருவத ராஜகுல சிவன்படவர் சமுதாய மீனவர் மக்கள் சார்பில் சம்பந்தி சீர்வரிசை பட்டு சாத்தும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் சிதம்பரம் நகர பருவத ராஜகுல மீனவர் பஞ்சாயத்தார்கள் தலைவர் முருகன், துணைத் தலைவர் தங்கதுரை, செயலாளர் உதய ஜோதி, பொருளாளர் பாஸ்கரன், இளங்கோவன், சென்னை தெய்வமணி, காமராஜ், குமார், வெங்கடேசன் உள் ளிட்ட பருவதராஜகுல சிவன்படவர் மீனவர் சமுதாய மக்கள் பலர் கலந்து கொண்டனர்.