அம்மனுக்கு பொன்னுாஞ்சல்

பழநி : பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் திருவாதிரை உற்ஸவத்தை முன்னிட்டு பொன்னுாஞ்சலில் அம்மன் எழுந்தருளினார்.

பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஜன.4ல் மாலை சாயரட்சை பூஜைக்கு பின் திருவாதிரை உற்ஸவம் அம்மனுக்கு காப்பு கட்டி துவங்கப்பட்டது. இதில் நேற்று அம்மன் பொன்னுாஞ்சலில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. அம்மன் பொன்னுாஞ்சலில் எழுந்தருளினார். 20 திருவாசகப் பாடல்கள் பாடி உற்ஸவம் நடந்தது.

Advertisement