மாவட்ட கிரிக்கெட் போட்டி  : 16 அணிகள் பங்கேற்பு 

கடலுார் : கடலுார் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி அண்ணா விளையாட்டரங்கில் நேற்று துவங்கியது.

மாவட்ட கிரிக்கெட் சங்க பதிவு அணிகளுக்கான மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் கோப்பை 2024-25ம் ஆண்டிற்கான இப்போட்டி துவக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அதிகாரி மகேஷ்குமார் போட்டியை துவக்கி வைத்தார். கடலுார், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இறுதிப் போட்டி வரும் 19ம் தேதி நடக்கிறது. ஏற்பாடுகளை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசன் செய்துள்ளார். விழாவில், சுதீர்பாபு, ராஜுவ், சிதம்பரம், மதியழகன், பாபு, மகேந்திரன் பங்கேற்றனர்.

Advertisement