பிரேக் 'டவுன்' பஸ்

அலங்காநல்லுார் : மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து அலங்காநல்லுார் அடுத்த அ.கோவில்பட்டிக்கு பயணிகளுடன் (எண் 60 பி) அரசு டவுன் பஸ் நேற்று மதியம் புறப்பட்டது.

அலங்காநல்லுார் ரோட்டில் குமாரம் வளைவில் வந்தபோது, கடந்த வாரம் தகுதிச் சான்று (எப்.சி.,) பார்த்த இந்த பஸ் திடீரென 'ஆப்' ஆனது.

டிரைவர் எவ்வளவோ முயன்றும் ஸ்டார்ட் ஆகவில்லை. பஸ்சில் இருந்த 'கூலன்ட் ஆயில்' முழுவதும் நின்ற இடத்தில் லீக் ஆனது. இந்நிலையில் பயணிகள் ஆட்டோ, அடுத்து வந்த பஸ்களில் சென்றனர்.

'செல்ப்' எடுக்காத அரசு டவுன் பஸ்சை கண்டக்டர், அப்பகுதியில் வேலை பார்த்தவர்கள் உதவியுடன் தள்ளி இயங்க வைத்தார்.

தகுதிச்சான்று பார்த்து வந்த அரசு பஸ்சை தள்ளி ஸ்டார்ட் செய்வது என்ன மாடலோ? என அவ்வழியாக சென்றவர்கள் பலரும் கூறி சென்றனர்.

Advertisement