விபத்தில் மூளைக்கான அபாயத்தை 'ெஹல்மெட்' குறைக்கிறது ஜிப்மர் நிர்வாகம் தகவல்

புதுச்சேரி : ெஹல்மெட் அணிவதால், தலைக்கு ஏற்படும் அபாயத்தை, 20 சதவீதமும், இறப்பிற்கான வாய்ப்பை 40 சதவீதம் வரையும் குறைக்க முடியும் என, ஜிப்மர் தெரிவித்துள்ளது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுச்சேரி அரசு அறிவிப்பின்படி, நேற்று முதல் அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளும், ெஹல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜிப்மர் முழு ஆதரவு அளிக்கிறது.

விபத்துகளால் ஏற்படும் இறப்புகள் மற்றும் காயங்களை குறைப்பதில் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது. போக்குவரத்து போலீஸ்துறையின், பிரசாரம் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

சாலை விபத்துகளினால் ஏற்படும் காயங்கள் மற்றும் இறப்புகளை ெஹல்மெட் பயன்பாட்டின் மூலம் கணிசமாக தவிர்க்கலாம். ஆண்டுதோறும் ஏராளமான சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜிப்மர் சிகிச்சை அளிக்கிறது.

அவர்களின் பலர் ெஹல்மெட் பயன்படுத்தாததால் மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகின்றனர். சாலை, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறோம். மேலும் தீவிரமான மூளை காயங்களை தடுப்பதில் ெஹல்மெட்டின் செயல் திறனை அறிந்துள்ளோம்.

ெஹல்மெட் அணிவதால், தலைக்கு ஏற்படும் அபாயத்தை, 20 சதவீதம் மற்றும் இறப்பிற்கான வாய்ப்பை 40 சதவீதம் வரை குறைக்க முடியும் ஆய்வுகள் மற்றும் மருத்துவ அனுபவங்கள் நிரூபிக்கின்றன. ெஹல்மெட் அணிவது, விபத்துகளின் போது மூளைக்கு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

அரசு ஊழியர்கள் மட்டுமில்லாது, புதுச்சேரியில் வசிக்கும் அனைவரும் ெஹல்மெட் பயன்படுத்த வேண்டும். இந்த எளிய நடவடிக்கை உயிர்களை பாதுகாக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement