மூதாட்டியிடம் செயின் பறித்த இருவர் கைது
தேனி : தேனி காட்டுநாயக்கன் பட்டியில் தண்ணீர் கேட்பது போல் வந்து மூதாட்டியிடம் 3 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற கோம்பை ஈஸ்வரன் 38, கண்ணன் 43, ஆகிய இருவரை வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.
உத்தமபாளையம் அணைப்பட்டி அம்மணி 65. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
சில நாட்களுக்கு முன் காட்டுநாயக்கன்பட்டி முதல் மல்லையக்கவுண்டன்பட்டி ரோட்டில் உள்ள உறவினர் தோட்டத்தில் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் மதியம் அந்த தோட்டத்திற்கு வந்த ஒருவர் தண்ணீர் கேட்பது போல் வந்தார். திடீரென அம்மனி அணிந்திருந்த ரூ.90 ஆயிரம் மதிப்பிலான 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார்.
பாதிக்கப்பட்ட பெண் புகாரில் அம்மணி வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் சண்முகம், எஸ்.ஐ., அசோக் தலைமையிலான குழுவினர் செயினை பறித்துச் சென்ற ஈஸ்வரன், கண்ணன் ஆகிய இருவரை கைது செய்தனர்.