மைசூரு அரண்மனையை காண வெளிநாட்டினர் ஆர்வம்

மைசூரு : அரண்மனை நகரமான மைசூருக்கு, உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஆண்டு முழுதும் சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். அதன்படி கடந்தாண்டு அதிகளவிலான சுற்றுலா பயணியர் வருகை தந்துள்ளதாக சுற்றுலா துறை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 11 மாதங்களும் சுற்றுலா பயணியர் அதிகம் வருகை தந்துள்ளனர்.

மைசூரு அரண்மனையை சுற்றிப்பார்க்க வெளிநாட்டு சுற்றுலா பயணியர் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். அடுத்து சாமுண்டீஸ்வரி தேவியை தரிசனம் செய்யவும் பக்தர்கள் அதிகம் சென்றுள்ளனர்.

மைசூரு மிருகக்காட்சி சாலை, வருணா ஏரி, தலக்காடு, சோமநாதபுரம், நஞ்சன்கூடு, பதனவாலு காந்தி ஆசிரமம், குமட்டகிரி, நாகரஹொளே தேசிய பூங்கா, பைகுப்பே தங்க கோவில், சுஞ்சனகட்டே நீர்வீழ்ச்சி, சிக்கதேவம்மா மலை ஆகிய இடங்களுக்கு கடந்தாண்டு 11 மாதங்களில் 37 லட்சத்து 52,790 பேர் சென்றுஉள்ளனர்.

வருணா ஏரிக்கு செல்லும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. அங்குள்ள சாகச நீர்சாகச விளையாட்டு, படகு சவாரியை பலரும் விரும்புகின்றனர்.

Advertisement