ஜே.இ.இ., தேர்வு வரும் 22ல் துவக்கம்

சென்னை: ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில், பொறியியல், தொழில்நுட்ப படிப்பில் சேருவதற்கான, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட நுழைவுத்தேர்வு, வரும் 22 முதல், 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நாட்டில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களிலும், இந்தியாவுக்கு வெளியில், 15 தேர்வு மையங்களிலும், வரும் 22, 23, 24, 28, 29ம் தேதிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான முதல் தாள் தேர்வுகள் நடக்க உள்ளன.

அதேபோல, பி.ஆர்க்., - பி.பிளானிங், உள்ளிட்ட படிப்புகளுக்கான, 2ஏ, 2பி, 2ஏ,பி., ஆகிய தாள்களுக்கான தேர்வுகள், வரும் 30ம் தேதி நடக்கும்.

விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு மையம் அமைந்துள்ள நகரம் பற்றிய விபரங்களை, https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தேர்வாளர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள், பின்னர் வழங்கப்படும். மேலும் விபரங்களை, www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement