ரூ.7,640 கோடி வரி செலுத்த தயார்; மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் மத்திய அரசுக்கு கடிதம்

1

புதுடில்லி: பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகி சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர், ரூ-7,640 கோடி வரி செலுத்த தயாராக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. குறிப்பாக, இரட்டை இலை சின்னத்தை பெற்று கொடுப்பதற்காக லஞ்சம் வாங்கிய வழக்கும் உள்ளது.

இந்த நிலையில், சுகேஷ் சந்திரசேகர் தன்னுடைய வக்கீல் மூலம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 'அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் எல்.எஸ். ஹோல்டிங்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்பீடு கேமிங் கார்ப்பரேசன் ஆகிய பெயரில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் மூலம், ரூ.22,410 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த வருவாயை இந்திய வரி கட்டமைப்புக்குள் கொண்டு விரும்புகிறேன். இதற்காக ரூ.7,640 கோடி வரி செலுத்தவும் தயாராக உள்ளேன்', இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement