தி.மு.க., நேர்மையான போர் வீரன் அல்ல: தமிழிசை

7


சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான கேள்விக்கு, 'தி.மு.க., நேர்மையான போர் வீரன் அல்ல' என பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்தார்.



இது குறித்து சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், தமிழிசை கூறியதாவது: கவர்னரும், முதல்வரும், தங்களது கருத்து வேறுப்பாட்டை விட்டு, அமர்ந்து ஒற்றுமையாக, தோழமையுடன் பேசி துணை வேந்தர்கள் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என நான் நினைத்து கொள்கிறேன்.


சீமானின் ஈ.வெ.ரா பற்றிய கருத்துக்கள் எல்லாம் பா.ஜ.,வின் கருத்துக்கள். காலம் காலமாக பா.ஜ., சொல்லி வந்த கருத்து தான். ஆகையால் எங்களது கருத்தியலை சீமான் பேச ஆரம்பித்து இருக்கிறார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான்.


ஆகையால் இனிமேல் ஈ.வெ.ரா.,வை பற்றிய பிம்பம் ஒவ்வொன்றாக உடைய ஆரம்பிக்கும் எனது கருத்து. பா.ஜ.,வின் பி டீம் எல்லாம் சீமான் கிடையாது. எங்களது 'தீம்'. எங்களது 'தீம்' ஐ அவர் பேசுகிறார். அவ்வளவு தான். அனைவருக்கும் தனி தனி கொள்கை இருக்கிறது.


ஆரோக்கியமான கருத்தை அவர் பதிவு செய்கிறார். உண்மை என்றாவது வெளிவரும். அண்ணாதுரை வளர்த்த தமிழ் அல்ல. ஆண்டாள் வளர்த்த தமிழ். ஈ.வெ.ரா வளர்த்த தமிழ் அல்ல. பெரியாழ்வார் வளர்த்த தமிழ். ஈ.வெ.ரா., குறித்து சீமான் கேட்டு இருப்பது நல்ல கேள்வி. இவ்வாறு தமிழிசை கூறினார்.

தி.மு.க., போர் வீரன் அல்ல



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான கேள்விக்கு, தமிழிசை அளித்த பதில்: பா.ஜ.,வின் போட்டியை ஏற்றுக்கொள்ளும் தகுதி தி.மு.க.வுக்கு இல்லை. போர்க்களத்தில் தி.மு.க., நேர்மையான போர்வீரன் அல்ல. முதுகில் குத்துபவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement