ரவி அல்லது ரவி மோகன் இது தான் எனது புதுபெயர்: நடிகர் ரவி அறிவிப்பு
சென்னை: ஜெயம் படத்தில் அறிமுகமாகிய ரவி, தனது புதிய பெயரை ரவி அல்லது ரவி மோகன் என்று அழைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் ரவி மோகன் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி உள்ளதாகவும், ரசிகர் மன்றம் இனி அறக்கட்டளையாக மாற்றம் செய்யப்படும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரவி மோகன் வெளியிட்ட அறிக்கை:
இன்று முதல் நான் ரவி அல்லது ரவி மோகன் என்று அழைக்கப்பட விரும்புகிறேன். இந்த பெயர் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை கனவுகளை முன்னோக்கி எடுத்து செல்லும்.
என் கனவு மற்றும் மதிப்புகளுடன் புதிய பயணத்தை தொடங்கும் என்னை இந்த பெயரிலேயே அனைவரும் அழைக்குமாறும், ஜெயம் ரவி என்ற பெயரில் இனி வரும் காலங்களில் அழைக்க வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
திரைத்துறை மீது நான் கொண்டுள்ள அளவற்ற அன்பின் பாத்திரமாக, 'ரவி மோகன் ஸ்டூடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளேன்.
எனக்கு ஆதரவளித்த சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய, என் ரசிகர் மன்றத்தை பிறருக்கு உதவும் வகையில் 'ரவி மோகன் ரசிகர்கள் அறக்கட்டளையாக" மாற்றப்படுகிறது.
இது, நான் பெற்ற அன்பையும், ஆதரவையும் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பாக மாற்றும் எனது இதயப்பூர்மான முயற்சி.
எனது புதிய பயணத்திலும், உங்களின் தொடர்ச்சியான ஆதரவு எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.