புண்ணிய தலங்களில் மது விலக்கு: விரைவில் முடிவு என்கிறார் முதல்வர்

5

போபால்: "மத்திய பிரதேசத்தில் உள்ள புண்ணிய தலங்களில் மதுவிலக்கு அமல்படுத்துவது குறித்து அரசு, துறவிகளின் பரிந்துரைகளை பரிசீலித்து வருகிறது' என்று முதல்வர் மோகன் யாதவ் கூறினார்.

போபாலில் மோகன் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கோவில்கள் மிகுந்த ஊர்களின் புனிதத்தன்மை உறுதி செய்வதற்காக, மதுவிலக்கு குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும், இது தொடர்பாக துறவிகள் அளித்த பரிந்துரைகளை மாநில அரசு பரிசீலித்து வருகிறது. அரசு விரைவில் முடிவு செய்யும்.

நடப்பு பட்ஜெட் ஆண்டு முடிவடையப் போகிறது. மத நகரங்களில் எங்கள் கொள்கையைத் திருத்தி, மதுவைத் தடை செய்வதை நோக்கிச் செல்ல வேண்டும் என்று அரசுயோசித்து வருகிறது.

பல துறவிகள் இதற்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். மேலும் மதச் சூழல் குறித்து மக்களிடமிருந்து வரும் புகார்களின் அடிப்படையில், உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத நகரங்களின் எல்லைக்குள் உள்ள இந்த மதுக் கடைகளை மூட வேண்டும் என்று அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

நாங்கள் தீவிரமாக இருக்கிறோம், விரைவில் இது தொடர்பாக ஒரு முடிவை எடுப்போம்.

இவ்வாறு மோகன் யாதவ் கூறினார்.

Advertisement