ஈ.வெ.ரா., பேச்சுக்கான ஆதாரத்தை வெளியிட்டது பா.ஜ.!

43

சென்னை: ஈ.வெ.ரா., கூறியதாக சீமான் தெரிவித்த கருத்துக்கான ஆதாரத்தை தமிழக பா.ஜ., வெளியிட்டுள்ளது.


@1brகடலூரில் நிருபர்களை சந்தித்த நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈ.வெ.ரா., கூறியதாக ஒரு கருத்தை வெளியிட்டார். அவர் மேற்கோள்காட்டி பேசிய விஷயங்கள் பெரும் சர்ச்சையானது. சீமானின் பேச்சுக்கு தி.மு.க.,வினரும், ஈ.வெ.ரா.,வை ஆதரிக்கும் குழுக்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.


சீமான் பேசிய கருத்து உண்மை தான். அதற்கு தேவையான ஆதாரங்களை தருவேன் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறி இருந்தார்.


இந்நிலையில், அண்ணாமலை சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தமது எக்ஸ் வலை தள பதிவில் ஆதாரத்தை வெளியிட்டு உள்ளார்.


ஈ.வெ.ரா., சிந்தனைகள் என்ற புத்தகத்தில் இருந்து அவர் ஆதாரங்களை மேற்கோள்காட்டி வெளியிட்டு இருக்கிறார். சர்ச்சைக்குரிய விஷயங்கள் இடம் பெற்றுள்ள புத்தக பக்கங்களை தன் பதிவில் அஸ்வத்தாமன் வெளியிட்டுள்ளார்.

பக்கம் எண் 333, 334, 335, 336 ஆகியவற்றில் உறவுமுறை என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள அத்தியாயத்தில் இது குறித்த கருத்து இடம் பெற்றுள்ளது.

Advertisement