157 பந்தில் 346 ரன் விளாசிய இரா
ஆலுர்: 'ஒன் டே' கோப்பை போட்டியில் 157 பந்தில் 346 ரன் விளாசினார் மும்பை வீராங்கனை இரா.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் பெண்களுக்கான (19 வயது) 'ஒன் டே' கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. கர்நாடகாவின் ஆலுரில் நடந்த போட்டியில் மும்பை, மேகாலயா அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு இரா ஜாதவ், அலினா (8) ஜோடி துவக்கம் தந்தது. பின் இரா, கேப்டன் ஹர்லே காலா இணைந்து ரன் மழை பொழிந்தனர். ஹர்லே (116) சதம் அடித்து அவுட்டானார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 274 ரன் சேர்த்தது.
இரா, முச்சதம் விளாசினார். மும்பை அணி 50 ஓவரில் 563/3 ரன் குவித்தது. 157 பந்தில் 346 ரன் விளாசிய இரா (16x6, 42x4), மிதாலி (26) அவுட்டாகாமல் இருந்தனர். பின் களமிறங்கிய மேகாலயா அணி 25.4 ஓவரில் 19 ரன்னுக்கு சுருண்டது. மும்பை 544 ரன்னில் வெற்றி பெற்றது. மும்பை சார்பில் ஜீயா, யாயாத்தி தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
முதல் இந்தியர்
பி.சி.சி.ஐ., நடத்தும் 20/50 ஓவர் தொடர்களில் முச்சதம் அடித்த முதல் இந்தியர் என சாதனை படைத்தார் 14 வயது வீராங்கனை இரா. பெண்களுக்கான பிரிமியர் லீக் தொடர் ஏலத்தில் இவரை யாரும் வாங்கவில்லை. 19 வயது உலக கோப்பை தொடரில் இவர், இந்திய அணியில் மாற்று வீராங்கனையாக இடம் பெற்றுள்ளார்.